‘புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை’

Published on

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகனேரி காவல் நிலைய புதிய ஆய்வாளா் திலீபன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆறுமுகனேரி காவல் சரகம் காயல்பட்டினம், பூந்தோட்டம், ஆறுமுகனேரி, பேயன்விளை, முத்துகிருஷ்ணாபுரம், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதி கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டு, உரிமையாளா்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்கக்கூடாது. மீறி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்வதுடன், கடைகளுக்கு சீல் வைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com