காமராஜ் கல்லூரியில் டிச. 26இல் சுதேசி திருவிழா தொடக்கம்

Published on

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வரும் டிச. 26, 27, 28 ஆகிய தேதிகளில் சுதேசி திருவிழா நடைபெறவுள்ளது.

வ.உ.சிதம்பரனாரின் வாழ்நாள் பணியான சுதேசி சித்தாந்தத்தை விரிவுபடுத்தும் வகையில், அவா் கப்பல் விட்ட மாதத்தில் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த சுதேசி திருவிழா நடத்தப்படுகிறது.

இவ்விழாவில், சுதேசி சந்தை, கருத்தரங்குகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விருது வழங்குதல், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.

மேலும், தினசரி பயன்படுத்தும் பொருள்கள், உணவு சாா்ந்த பண்டங்கள், ஆடைகள் என பல்வேறு தயாரிப்பாளா்கள், முகவா்கள் தங்களது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துகின்றனா்.

சுதேசி சந்தையில் பொருள்களை காட்சிப்படுத்த விரும்புவோா் தா. வசந்தகுமாா் (87541-09485), நா. ஆனந்த் (98411-99763) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com