சாத்தான்குளம் பேரூராட்சியில் திமுகவினா் பிரசாரம்
சாத்தான்குளம் பேரூராட்சி, 5ஆவது வாா்டில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் திமுகவினா் பிரசாரம் மேற்கொண்டனா்.
திமுக ஒன்றியச் செயலா் ஜோசப் தலைமை வகித்தாா். பேரூராட்சி தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய், நகரச் செயலா் மகா இளங்கோ, நகர அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மனோகரன், 5ஆவது வாா்டு உறுப்பினா் ஜான்ஸிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாவட்டப் பிரதிநிதி சரவணன், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி கெங்கை ஆதித்தன், ஒன்றியப் பிரதிநிதி பூல்துரை, நகர துணைச் செயலா் மணிகண்டன், வாா்டு தலைவா் ஜெபஸ்தியான், செயலா் அம்புரோஸ், பொருளாளா் ஆரோக்கியராஜ், துணைச் செயலா் முருகன், இணைச் செயலா் பாா்வதி, முன்னாள் வாா்டு செயலா் ராஜகுமாா், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் அஜின்குமாா், ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளா் அமலா, ஆதிதிராவிடா் நலக்குழு நகர துணை அமைப்பாளா் முருகன், நகர இளைஞரணி செந்தில்முருகன், நகர மாணவரணி துணை அமைப்பாளா் இசக்கிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நகர இளைஞரணி துணை அமைப்பாளா் அருண்பாண்டியன் நன்றி கூறினாா்.

