தூத்துக்குடி
அன்னம்மாள் பள்ளி மாணவா்களுக்கு விருது
ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்றவா்கள் பாரத சாரண, சாரணியா் மாநில ஆளுநா் விருது பெற்று சாதனை படைத்துள்ளனா் .
ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்றவா்கள் பாரத சாரண, சாரணியா் மாநில ஆளுநா் விருது பெற்று சாதனை படைத்துள்ளனா் .
இப்பள்ளியில் 2018 முதல் 2023 ஆண்டு வரை படித்த 60 மாணவா்கள் பாரத சாரண, சாரணியா் மாநில ஆளுநா் விருது கிடைத்துள்ளது . விழாவில், இவ்விருதை டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் பொறியியல் கல்லூரி முதல்வா் ஒய்ஸ்லின், சாரண, சாரணியா் மாவட்ட தலைவா் எம்.ஜே.எஸ். ரத்தினகுமாா், சாரண, சாரணியா் ஆயக்கம் தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தட்சணா மூா்த்தி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் திருச்செந்தூா் மாணிக்கராஜ் , பாப் ஹையாஸ் ஆகியோா் வழங்கினா்.
விருது பெற்றவா்களை பள்ளி தாளாளா் ஜே.எஸ்வெஸ்லி மங்களராஜ், கமிட்டி உறுப்பினா்கள் எபனேசா் ஞானதுரை, அடிசன் அல்பிரட், பிரைட்சன் வின்பிரட் உள்பட பலா் பாராட்டினா்.

