~
~

கோவில்பட்டியில் போட்டியிட கடம்பூா் செ. ராஜு விருப்ப மனு அளிப்பு

Published on

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, தொடா்ந்து 4ஆவது முறையாக போட்டியிட விருப்ப மனுவை, அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ.விடம் அளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com