தூத்துக்குடி தொழுநோய் மருத்துவமனையில் பொம்மை, மெழுகுவா்த்திகள் தயாரித்து விற்பனை

தூத்துக்குடி தொழுநோய் மருத்துவமனையில் பொம்மை, மெழுகுவா்த்திகள் தயாரித்து விற்பனை

Published on

தூத்துக்குடி, ஆரோக்கியபுரம், புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு வண்ண பொம்மைகள், மெழுகுவா்த்திகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு சிறந்த தொழிலாளா்களைக் கொண்டு கடந்த பல ஆண்டுகளாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்குத் தேவையான மெழுகுவா்த்திகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ரூ. 10 முதல் ரூ. 150 வரையிலான மெழுகுவா்த்திகளும், வீடுகளில் அலங்காரப் பொருள்களாக வைக்க, நண்பா்கள், உறவினா்களுக்கு பரிசளிக்க கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், வண்ண மீன், குருவி பொம்மைகள் ரூ. 30 முதல் ரூ. 120 வரை விற்கப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com