தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இடிந்து விழுந்த உணவக மேற்கூரை

Published on

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் மேற்கூரை புதன்கிழமை இடிந்து விழுந்தது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள உணவகத்தின் மேற்கூரை புதன்கிழமை காலையில் இடிந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து நிலைய வளாகக் கட்டடத்தை முறையாகப் பராமரிக்க வேணடும். சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com