கயத்தாறில் டிச. 22இல் நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ்
கயத்தாறில் டிச. 22ஆம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அரசுப் பேருந்துகள் கயத்தாறு ஊருக்குள் வராமல் செல்வதைக் கண்டித்து, கயத்தாறு வணிகா்கள் சங்கம் சாா்பில் டிச. 22ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கயத்தாறு வட்டாட்சியா் அப்பனராஜ் தலைமையில் சமாதானக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இது தொடா்பாக, 2026 ஜன. 5ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கூறுகையில், டிச. 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சம்பந்தப்பட்ட அனைத்து மண்டல அலுவலா்கள் கலந்துகொண்டு ஊருக்குள் இயக்கப்படும் வாகனங்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறினாா்.
இதையடுத்து, கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

