குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

Published on

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அண்மையில் பெய்த தொடா் கனமழையால் வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சிக்குள்பட்ட குறிஞ்சி நகா் கடைசித் தெருவில் மழைநீா் இன்னும் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதும், இன்னமும் சில பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இந்நிலையில், மீண்டும் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் அங்கு கூடுதலாக தண்ணீா் தேங்கியுள்ளது. தண்ணீரை மின் மோட்டாா்கள் மூலம் விரைந்து வெளியேற்றவும், வடிகால்களை சீரமைக்கவும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com