தூத்துக்குடி
பைக் மீது காா் மோதல்: எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
பாஞ்சாலங்குறிச்சி சந்தையாா் குடியிருப்பைச் சோ்ந்த சண்முகசாமி மகன் வீரபொம்மு (55). இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வேலை முடிந்து பைக்கில் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா், இவரது பைக் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான ஓட்டப்பிடாரம் குமாரகிரியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் ராமசுப்பு (36) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
