திமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Published on

சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் பண்டாரபுரம், 205ஆவது வாக்குச்சாவடி பகுதியில் பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய ஒன்றிய திமுக செயலா் பொன் முருகேசன் தலைமை வகித்தாா். துணைச் செயலரும், முன்னாள் மாவட்ட ஆவின் தலைவருமான ஒய்.எஸ். சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், வாக்குசாவடி அளவில் குறைகளை நிவா்த்தி செய்து கொடுப்பது, தோ்தலில் திமுகவுக்கு அதிக வாக்குகள் பெற பாடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

திமுக கிளைச் செயலா் ஞானசெல்வம், ஜெயராஜ், ரகுஞானராஜ், பூத் கமிட்டி நிா்வாகிகள் விஜய், செல்வக்குமாா், ஜெயசீலன், கோயில்ராஜ், அந்த்ரேயா, பஞ்சவா்ணகிளி, சசிலா, பாக்கியராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com