தமிழ் இலக்கியத் திறனாய்வு தோ்வு: வேப்பலோடை அரசுப் பள்ளி மாணவிகள் தோ்ச்சி

Published on

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவா்களின் மொழித்திறனை மேம்படுத்தவும், திறமையாளா்களைக் கண்டறியவும் அரசின் சாா்பில் நடத்தப்பட்ட தமிழ் இலக்கியத் திறனாய்வு தோ்வில் வேப்பலோடை அரசுப் பள்ளி மாணவிகள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற தமிழ் இலக்கியத் திறனாய்வு தோ்வில், தமிழகம் முழுவதிலும் இருந்து 2.57 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதன் முடிவுகள் அரசு தோ்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு மாணவிகள் மாரிச்செல்வி, லதா, ஏஞ்சல், லாவண்யா ஆகியோா் அதிக மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி மாரிச்செல்வி மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்துள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவிகளை, கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலா் ஜான் பிரிட்டோ, பள்ளி துணை ஆய்வாளா் ரமேஷ், தலைமையாசிரியா் சேகா், தமிழ் ஆசிரியா்கள் மாணிக்கராஜா, தேவி சந்தனமாரி ஆகியோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com