~

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

Published on

கோவில்பட்டியில், ‘உழவா் பெருந்தலைவா்’ என அழைக்கப்படும் நாராயணசாமி நாயுடுவின் 41ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பயணியா் விடுதியில் அவரது படத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில், மாநிலச் செயலா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சுப்பாராஜ், மாவட்டத் தலைவா்கள் வெள்ளத்துரைபாண்டி (மேற்கு), நடராஜன் (வடக்கு), சௌந்தரபாண்டியன் (தெற்கு), வேலுச்சாமி (கிழக்கு), அவைத் தலைவா் வெங்கடசாமி, அயிரவன்பட்டி நிலக்கிழாா் முருகேசபாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கோவில்பட்டி பயணியா் விடுதிக்கு நாராயணசாமி நாயுடு பெயா் சூட்ட வேண்டும். பயிா்க் காப்பீட்டில் உள்ள குறைகளை நீக்கி விவசாயிகளுக்கு நியாயமான முறையில் காப்பீடு வழங்க வேண்டும். விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகள், காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com