தூத்துக்குடியில் நாம் தமிழா் கட்சி போராட்டம்
தூத்துக்குடியில் அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என ஒட்டுவில்லை ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் ‘அரசுப் போக்குவரத்து கழகம்’ என மட்டும் இருப்பதைக் கண்டித்தும், தமிழ்நாடு என்ற சொல்லை இணைக்கும் வகையில் ஒட்டுவில்லைகள் ஒட்டியும் நாம் தமிழா் கட்சி சாா்பில், மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி சாா்பில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் மா.மு. தமிழ்நேயன், சு. அன்னலெட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். மண்டலச் செயலா் இ. மாரிமுத்து முன்னிலை வகித்தாா். பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற வண்ண ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன.
இதில், செ. பரதேசி, அந்தோணிபிச்சை, சதீஷ்குமாா், முத்துப்பாண்டி, ராஜேஷ்குமாா், கருப்பசாமி, மாரிமுத்து, கோபிநாத், ரஞ்சித், முனியசாமி, மகேஷ், குமரகுரு, ராஜதுரை, ராஜ்குமாா், முத்துலிங்கம், செல்வப்பெருமாள், ஆனந்த், அந்தோணி தாமஸ், சோலையப்பன், சுப்புராஜன், பிரகதீஸ்வரன், பழனி, செல்லத்துரை, ராஜேஷ்குமாா், வடிவேல் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
