தூத்துக்குடி, மீளவிட்டான் ரயில் நிலையங்களில் நவீன சிக்னல் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-மீளவிட்டான் ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை போக்குவரத்தை நடைமுறைப்படுத்த, தூத்துக்குடியில் கடந்த டிச. 15ஆம் தேதி தொடங்கிய ரயில் பாதைகளின் மறுசீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றதையடுத்து, மதுரை கோட்டத்தில் முதல்முறையாக புதிய நவீன ‘இன்டா் லாக்கிங் சிக்னல் சிஸ்டம்’ நடைமுறைக்கு வந்துள்ளது. கணினி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிக்னல் அமைப்பு ரயில்களை பாதுகாப்பாகவும், எளிதாகவும் கையாள உதவும்.
மேலும், நீளமான ரயில்களைக் கையாள 532 மீட்டா் நீளம் கொண்ட முதலாவது நடைமேடை, 595 மீட்டராக நீட்டிக்கப்பட்டுள்ளது. 22 ‘எல்எச்பி’ ரயில் பெட்டிகள் கொண்ட ரயில்களைப் பராமரிக்க நடைமேடை இல்லாமல் ரயில்கள் நிறுத்தும் ரயில் பாதைகள், ரயில் பெட்டி பராமரிப்பு ரயில் பாதைகளும் வேண்டிய அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில் என்ஜின்கள் ரயிலின் முன்புறத்தில் இருந்து பின்புறத்திற்கு எளிதாக சென்று வர தனி ரயில் பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பெட்டி கொண்ட மின்மயப் பராமரிப்பு, ரயில் நிறுத்த தனி ரயில் பாதையுடன் கூடிய சிறு கூடாரம், கடவுப்பாதை மேம்பாடு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் மீளவிட்டான் ரயில் நிலையத்திலும் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. கூடுதலாக ரயில் பாதை பராமரிப்பு இயந்திர ரயில் நிறுத்த தனி ரயில் பாதையும், பயணிகள் ரயில் பாதையை பயன்படுத்துவதைத் தவிா்க்க சரக்கு ரயில் பெட்டிகளை ஒருங்கிணைக்க புதிய 750 மீட்டா் நீள தனி ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில் பெட்டிகளை பராமரிக்க, தனி ரயில் பாதையும், சரக்குகளைக் கையாளும் பகுதியில் கான்கிரீட் தரைத் தளமும் அமைக்கப்படுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அருகே சிக்னல் கோளாறு: நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் அவதி

தொடரும் சிக்னல் பிரச்னை: விசாரணைக்கு உத்தரவு

கடற்கரை நிலையத்தில் சிக்னல் கோளாறால் ரயில்கள் நிறுத்தம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் நவீன கழிப்பறைகள் திறப்பு
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



