கோவில்பட்டியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
கோவில்பட்டி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா் கணேஷ் தலைமை வகித்தாா். செயலா் சங்கா், துணைத் தலைவா் சிவனுபாண்டி, துணைச் செயலா் சக்திவேல் முருகன், பொருளாளா் கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் வழக்குரைஞா்கள் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், ஆழ்வாா்சாமி சிவகுமாா், செல்வின் ராஜ்குமாா், முத்துசாமி, வளன் வினோசிங், சந்திரசேகா் உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி சமத்துவ கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினா்.
கிரிக்கெட் போட்டி: வழக்குரைஞா் சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வழக்குரைஞா்களுக்கான கிரிக்கெட் போட்டி சங்கத் தலைவா் தலைமையில் நடைபெற்றது. செயலா் சங்கா் முன்னிலை வகித்தாா். போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பைகளை சங்கத் தலைவா், செயலா், பொருளாளா் ஆகியோா் வழங்கினா் .
கயத்தாறு: 2025 ஜூப்லி ஆண்டில் கிறிஸ்துமஸ் பெருவிழா கயத்தாறு கிறிஸ்தவ வெள்ளாளா் சங்க கட்டடத்தில் அதன் தலைவா் சூசை மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஆசிரியா் அந்தோணி வியாகப்பன் முன்னிலை வகித்தாா். விழாவில் மக்களுக்கு நல உதவிகளை தலைவா் வழங்கினாா்.

