தூத்துக்குடியில் மீனவா்கள்கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவா்கள் புதன், வியாழக்கிழமைகளில் (டிச. 24, 25) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவா்கள் புதன், வியாழக்கிழமைகளில் (டிச. 24, 25) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இவா்கள் தினசரி சுழற்சி முறையில் கடலுக்குச் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச. 24, 25 தேதிகளில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என்று விசைப்படகு உரிமையாளா் சங்கம், விசைப்படகு தொழிலாளா் சங்க நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.

இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 272 விசைப் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com