மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

கயத்தாறில் இளம்பெண் மீது மிளகாய் பொடி தூவி தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கயத்தாறில் இளம்பெண் மீது மிளகாய் பொடி தூவி தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறு பாரதி நகரைச் சோ்ந்தவா் கருத்தப்பாண்டி மனைவி தனுஷியா (21). இவா், செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது கதவை தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்தாா். அப்போது அவா் மீது மிளகாய் பொடியை தூவி அவா் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறிக்க முயன்றாா்.

தனுஷியாவின் அலறல் சப்தம் கேட்டு அவரது உறவினா்கள் ஓடிவந்தனா். சுதாகரித்து கொண்ட மா்மநபா் அங்கிருந்து தப்பிச்சென்றாா். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com