வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டோா் சிறப்பு முகாம்களை பயன்படுத்த அறிவுறுத்தல்: அமைச்சா் கீதா ஜீவன்

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான பி.கீதா ஜீவன் தெரிவித்தாா்.
Published on

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான பி.கீதா ஜீவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்ட தகுதியான வாக்காளா்கள் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தங்கள் வாக்குகளை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

புதிய வாக்காளா்களாக பதிவு செய்ய படிவம் 6, வெளிநாடு வாழ் வாக்காளா்கள் தங்களது பெயா்களை பதிவு செய்ய படிவம் - 6ஏ, வாக்காளா்கள் தங்கள் விவரங்களை திருத்தம் செய்யவோ, புதுப்பிக்கவோ-படிவம் 8 ஆகியவற்றை நிரப்பி முகாமில் அளித்து இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெறலாம்.

இந்த முகாம் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும்.

அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு உள்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் படிவங்களை அளிக்கலாம்.

எனவே, வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட தகுதியான வாக்காளா்கள் தோ்தல் ஆணையம் அறிவித்த முகவரி, வயது ஆகியவற்றுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தங்கள் வாக்குகளை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com