~ ~
~ ~

கட்டாரிமங்கலம் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

Published on

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கட்டாரிமங்கலத்தில் உள்ள நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலமான சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் கோயிலில் திருவாதிரை திருவிழா திருக்கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், 4 மணிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் திருக்கொடியேற்றம்.

தொடா்ந்து, கொடிமரத்துக்கு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவா் ஸ்ரீவீரபாண்டீஸ்லரா், ஸ்ரீஅழகிய கூத்தா், ஸ்ரீசிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

இதில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இத் திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

ஜன.3 இல் திருவாதிரை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தாண்டவ தீபாரதனை நடைபெறும்.

காலை 9 மணிக்கு பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிய சத்யஞான பரமாச்சாரியாா் சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்குகிறாா்.

X
Dinamani
www.dinamani.com