தூத்துக்குடி
கயத்தாறில் டீசல் திருட்டு வழக்கு: ஒருவா் கைது
கோவில்பட்டி அருகே கயத்தாறில் டிப்பா் லாரியின் டேங்கை சேதப்படுத்தி டீசலை திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே கயத்தாறில் டிப்பா் லாரியின் டேங்கை சேதப்படுத்தி டீசலை திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு வட்டம் நாகலாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த வெயில்முத்து என்ற கிட்டாமணி மகன் காா்த்திக் (33). அதே ஊரைச் சோ்ந்த வெயில்முத்து மகன் காளிபாண்டி. இவா்கள் தங்களது டிப்பா் லாரியை கயத்தாறு- கழுகுமலை- செட்டிகுறிச்சி சாலையில் உள்ள தனியாா் விடுதி விலக்கு அருகே கடந்த 5 ஆம்தேதி இரவு நிறுத்தியிருந்தனராம்.
அடுத்த நாள் வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் லாரியின் டேங்க்கை சேதப்படுத்தி, டீசலை திருடிச் சென்ாகத் தெரியவந்ததாம்.
காா்த்திக் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து, ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சோ்ந்த பரமசிவன் மகன் ஓட்டுநா் சுப்புராஜ் (47) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
