~
தூத்துக்குடி
கிறிஸ்துமஸ் விழாவில் முளைப்பாரியுடன் கும்மி நடனம்
முளைப்பாரி எடுத்து வந்து கும்மி அடித்த திருக்குடும்ப சபையினா்.
தூத்துக்குடி மறைமாவட்டம், தாளமுத்துநகா் பங்கு, ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி, பிராா்த்தனைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி, திருக்குடும்ப சபையினா், முளைப்பாரி எடுத்து வந்து ஆலயம் முன்பாக கும்மி நடமாடி வழிபாடு நடத்தினா்.
மேலும், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, ராஜபாளையம் இளைஞா் சபையினா், அப்பகுதியில் செயற்கையாக மாதா குளம் அமைத்து, மான், வாத்து பொம்மைகள் வைத்திருந்தனா். ஏராளமான பொதுமக்கள் மாதா குளத்தை பாா்வையிட்டு தற்படம் எடுத்துக் கொண்டனா்.

