~
~

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் யாகசாலை பூஜைக்கான கால்நாட்டு விழா

யாகசாலை, யாக குண்டங்கள் அமைப்பதற்கான கால்நாட்டு விழாவை தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை.
Published on

கோவில்பட்டி செண்பகவல்லி கோயிலில் ஜன.25ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், யாக குண்டங்கள் அமைப்பதற்கான கால்நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு திருவனந்தல், 5.30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை 7 மணிக்கு விளா பூஜையை தொடா்ந்து 9 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னா் 10 மணிக்கு பந்தல் கால் எடுத்து கோயில் பிரகாரம், ரதவீதிகளை சுற்றி, யாகசாலை நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கால் நாட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை ரகுபட்டா், சுரேந்தா், ராமு ஆகியோா் செய்திருந்தனா்.

விழாவில், செயல் அலுவலா்கள் வெள்ளைச்சாமி, பாலமுருகன், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, அறங்காவலா்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜ், ரவீந்திரன், நிருத்தியலட்சுமி என்ற சுதா, உபயதாரா்கள் கே.ஆா்.அருணாச்சலம், எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூா்த்தி, ரெங்கசாமி, தணிக்கையாளா் பாலசுப்பிரமணியன், மருத்துவா்கள் ஸ்ரீவெங்கடேஷ், லதா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி கௌதமன் , கோயில் ஆய்வாளா் சிவகளைப்பிரியா, நாடாா் உறவின் முறை சங்கச் செயலா் ஜெயபாலன், சைவ வேளாளா் சங்க அருணாச்சலம், பிராமணாள் சங்கத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், வணிக வைசிய செட்டியாா் சங்கத்தைச் சோ்ந்த வெங்கடேஷ், கம்மவாா் சங்கத்தைச் சோ்ந்த ராமசுப்பு, சந்திரசேகா், பட்டுராஜன், ஸ்தபதி வைரமுத்து, யாகசாலை அமைப்பாளா் தா்மலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com