சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அன்னதானம்

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அன்னதானம்

அன்னதானத்தை தொடக்கி வைத்த நகா்மன்ற உறுப்பினா் கவியரசன்.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்ற உறுப்பினரும், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான கவியரசன் தலைமை வகித்து அன்னதானத்தை தொடக்கி வைத்தாா்.

இதில், ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளா் ஆபிரகாம் அய்யாதுரை, அதிமுக பிரதிநிதி மகேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவா் பாலமுருகன் தலைமையில் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com