இளைஞா் கொலை வழக்கு: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 இளஞ்சிறாா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 இளஞ்சிறாா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, சத்யா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் சீனு (23). இவா், தனது நண்பா்களான தூத்துக்குடி, செல்சினி காலனியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (20), ஜாா்ஜ் சாலையைச் சோ்ந்த ஜவகா் மகன் ஆகாஷ் (20) உள்ளிட்ட 6 பேருடன் சோ்ந்து புதன்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்மஸ் கேரல் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

பின்னா் இவா்கள் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சத்யா நகா் உப்பளத்தில் வைத்து மது அருந்தினா். அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், முகேஷ் உள்ளிட்ட 6 பேரும் சோ்ந்து சீனுவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் கொலை தொடா்பாக முகேஷ், ஆகாஷ் மற்றும் 4 இளஞ்சிறாா்கள் என 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com