தூத்துக்குடி
தூத்துக்குடி சிவன் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்
தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயிலில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு, திருவாதிரை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயிலில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு, திருவாதிரை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை, நடன தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். 10 நாள்கள் நடைபெறும் விழாவில், தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் ஜன. 3ஆம் தேதி நடைபெற உள்ளது.