பள்ளக்குறிச்சி, அழகப்பபுரத்தில் 
வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

பள்ளக்குறிச்சி, அழகப்பபுரத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

Published on

சாத்தான்குளம் ஒன்றியம், பள்ளக்குறிச்சி ஊராட்சியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொது சேவை மையக் கட்டடம், சிவன்குடியேற்று கிராமத்தில் ரூ. 10.15 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, அழகப்பபுரம் ஊராட்சியில் ரூ. 30.85 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன் முன்னிலை வகித்தாா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கட்டடப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக செயலா் பொன் முருகேசன், முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, கோதண்டராமன், ரமேஷ் பிரபு, ஜெயராஜ், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவா் முத்துராஜ், சாத்தான்குளம் பேரூராட்சி உறுப்பினா்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், பள்ளக்குறிச்சி ஊராட்சி செயலா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com