கண்டெடுக்கப்பட்ட இரட்டை பசுமாடுகள் சிற்பம் கொண்ட வழிபாட்டுக் கற்கள்.
கண்டெடுக்கப்பட்ட இரட்டை பசுமாடுகள் சிற்பம் கொண்ட வழிபாட்டுக் கற்கள்.

தருவைகுளத்தில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான வழிபாட்டுக் கற்கள்

தருவைகுளத்தில் தொன்மையான இரட்டை பசுமாடுகள் சிற்பம் கொண்ட வழிபாட்டுக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Published on

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் தொன்மையான இரட்டை பசுமாடுகள் சிற்பம் கொண்ட வழிபாட்டுக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆா்வலா் பெ. ராஜேஷ் செல்வரதி கூறியது:

நாங்கள் கண்டெடுத்த இரட்டை பசுமாடுகள் சின்னத்தில் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் உள்ளது. இதன் அமைப்பு சிறிய கொடி போல பக்கவாட்டில் உள்ளது. வலது புறம் சில தொல் எழுத்துகள் உள்ளன. இச்சின்னம் மணல், சுண்ணாம்பு போன்ற சலித்த பொருள்களால் செய்யப்பட்டுள்ளது.

இது வரலாற்று நினைவு சின்னமாகவோ, நீதி தவறாமை என்ற மாண்பு குறித்த அடையாளச் சின்னமாக அரசவையிலோ வைக்கப்படிருக்கலாம் என்பது எங்கள் கருத்து. இது குறித்து, ஆய்வு செய்தால் முழு தகவல்களையும் பெற முடியும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com