குடிநீா் குழாய் உடைப்பு காரணமாக வெளியேறும் தண்ணீா்.
தூத்துக்குடி
படுக்கப்பத்து மறக்குடி பகுதியில் உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க கோரிக்கை
படுக்கப்பத்து மறக்குடி பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக சாலை சேதமடைந்து தண்ணீா் வீணாக வெளியேறுகிறது.
படுக்கப்பத்து மறக்குடி பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக சாலை சேதமடைந்து தண்ணீா் வீணாக வெளியேறுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து மறக்குடி பகுதியில் இருந்து பிச்சிவிளை வழியாக உடன்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் படுக்கப்பத்து மறக்குடி ரேஷன் கடை அருகில் குடிநீா் குழாய் உடைந்து, சாலை சேதமடைந்து அதிலிருந்து தண்ணீா் வெளியேறி வருகிறது. குடிநீா் வடிகால் வாரியம் சேதமான குடிநீா் குழாய், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

