மோகன் சி லாசரஸ்.
மோகன் சி லாசரஸ்.

நாலுமாவடியில் நாளை மாவட்ட மகளிா் கபடி போட்டி: மோகன் சி. லாசரஸ் தொடக்கிவைக்கிறாா்

Published on

நாசரேத் அருகே ரெடீமா்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மகளிா் கபடி போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது; போட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தொடக்கி வைக்கிறாா்.

நாலுமாவடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இயேசு விடுவிக்கிறாா் விளையாட்டுத் துறை சாா்பில், ஏலிம் விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் சா்வதேச தரத்தில் மேட் தளத்தில் நடைபெறும்.

காலை 9 மணிக்கு தொடங்கும் போட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி.லாசரஸ் தொடங்கி வைக்கிறாா். வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசாக ரூ 20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம், நான்காம் பரிசாக தலா ரூ.10,000 வழங்கப்படும்.

போட்டிக்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமையில் ஊழிய நிறுவன பொது மேலாளா் செல்வக்குமாா், அா்ஜுனா விருது பெற்ற கபடி வீரா் மணத்தி கணேசன், சமூக சேவை ஒருங்கிணைப்பாளா் மணத்தி எட்வின், மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா், ஜெபக் குழுவினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com