அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மயில் மீது எழுந்தருளிய முருகனுடன் பாதயாத்திரையாக வந்த  சாத்தூா் பக்தா்கள்
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மயில் மீது எழுந்தருளிய முருகனுடன் பாதயாத்திரையாக வந்த சாத்தூா் பக்தா்கள்

திருச்செந்தூருக்கு பாத யாத்திரை வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாா்கழி மாதம் தொடங்கியது முதல் விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் இருந்து திருச்செந்தூா் கோயிலுக்கு பாத யாத்திரை பயணத்தை பக்தா்கள் மேற்கொள்வாா்கள். அதே போல, நிகழாண்டு மாலை அணிந்து விரதம் தொடங்கி, குழுக்களாக காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்து நோ்த்திக்கடன் செலுத்த பக்தா்கள் திருச்செந்தூா் வரத் தொடங்கியுள்ளனா்.

கடந்த சில தினங்களாக விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், சாத்தூா் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து கொண்டிருக்கின்றனா். திங்கள்கிழமை சாத்தூரைச் சோ்ந்த பக்தா்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மயில் மீது எழுந்தருளிய முருகப்பெருமான் முன் காவடி எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் வந்து வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com