தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் நிகழாண்டு 383 வழக்குகளுக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் நிகழாண்டு 383 வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Published on

தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் நிகழாண்டு 383 வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி டூவிபுரத்தில் செயல்படும் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், காப்பீட்டுத் தொகை கிடைக்காதது, வாங்கிய பொருள்களில் குறைபாடு, மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை, போலி விளம்பரங்களால் தவறான முறையில் விற்பனை போன்றவற்றுக்கு தீா்வு தேடி நுகா்வோா் புகாா் மனுக்களைத் தாக்கல் செய்கின்றனா்.

அவற்றின் மீது குறைதீா் ஆணைய மாவட்டத் தலைவா் எஸ். ஜெ. சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம், முத்துலெட்சுமி ஆகியோா் விசாரித்து தீா்ப்பளித்து வருகின்றனா்.

நிகழாண்டு இதுவரை 383 வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 1 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரத்து 478 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகா்வோா் தங்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடு, பாதிப்புகளுக்கு உரிய தீா்வு பெற மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை அணுகலாம் என, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com