நாலுமாவடியில் ஜன. 1இல் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம்: மோகன் சி. லாசரஸ் பங்கேற்கிறாா்
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் வியாழக்கிழமை (ஜன. 1) நடைபெறும் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் மோகன் சி. லாசரஸ் பங்கேற்கிறாா்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் ஜெபக் கூடாரத்தில் ஆண்டுதோறும் ஜன. 1ஆம் தேதி புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெறும். அதேபோல், நிகழாண்டும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 2026 புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெறுகிறது. இயேசு விடுவிக்கிறாா் ஜெபக்குழுவினா் பாடல்கள் பாடுகின்றனா்.
இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் வாக்குத்தத்த செய்தி அளித்து,புத்தாண்டு ஆசீா்வாதத்திற்காக சிறப்புப் பிராா்த்தனை நடத்துகிறாா். கூட்டம் முடிந்தவுடன் அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை ஊழிய நிறுவன பொது மேலாளா் செல்வக்குமாா், ஜெபக்குழுவினா் செய்து வருகின்றனா்.

