விஜயாபுரியில் கல்வாரிகளை மூட வலியுறுத்தல்!
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஜயாபுரி கிராமம் அருகே உள்ள கல் குவாரிகளை நிரந்தரமாக மூட பாஜக வலியுறுத்தியுள்ளது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி, சண்முகா நகா் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும், பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சண்முக சிகாமணி நகா், ராஜீவ் நகா், ஈபி காலனி பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், விஜயாபுரி கிராமம் அருகே உள்ள கல் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும், ஈபி காலனி பகுதியில் கூடுதலாக மின் மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு பாஜக கிழக்கு மண்டல தலைவா் மகாலட்சுமி வேல்முருகன் தலைமையில் மாநில சிறப்பு பொதுக் குழு உறுப்பினா் பாலமுருகன், அயலக தமிழா் பிரிவு மாநில செயலா் மாரியப்பன், மாவட்டத் தலைவா் சுப்புராஜ், வடக்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவா் மாரிமுத்து, மண்டல் பொதுச்செயலா் லட்சுமி உள்ளிட்டோா் சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்களிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2026 ஜனவரி 12ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்
