திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் மீன்கள் வாங்க குவிந்துள்ள மக்கள்.
திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் மீன்கள் வாங்க குவிந்துள்ள மக்கள்.

விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்: மீன்கள் விலை உயா்வு

Published on

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்களின் தொடா் வேலை நிறுத்தம் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

ஆனால் ஆழ்கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பாததாலும், நிலவு ஒளி காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

இதில், சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,100, ஊளி ரூ.700, விளை மீன் ரூ.650, பாறை மீன் ரூ.500, கட்டா ஒரு கூடை ரூ.700, நண்டு ரூ.600 என விற்பனையானது. மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com