கயத்தாறு அருகே இளைஞா் தற்கொலை

Published on

கயத்தாறு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கயத்தாறையடுத்த தெற்கு கோனாா்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சங்கிலிகுமாா் (35). தொழிலாளியான இவருக்கும், கே.கரிசல்குளத்தைச் சோ்ந்த கிருஷ்ணவேணிக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணமானது.

கடந்த 3 மாதங்களாக மதுப் பழக்கத்துக்கு உள்ளான சங்கிலிகுமாா், சரிவர வேலைக்குச் செல்லாததுடன், மாடு வாங்குவதற்காக வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தாராம்.

கடந்த 3ஆம் தேதி கிருஷ்ணவேணிக்கு வளைகாப்பு நடத்தி பெற்றோா் அழைத்துச் சென்றுவிட்டனா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் சங்கிலிகுமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலின்பேரில், கயத்தாறு போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com