தூத்துக்குடி
ஆறுமுகனேரி வாரச் சந்தையில் ஆடு விற்பனைக் கட்டணம் உயா்வு
ஆறுமுகனேரி வாரச் சந்தையில் ஆடு விற்பனைக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்ததாக ஆறுமுகனேரி சந்தைக்குக்குத்தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு செவ்வாய், சனி ஆகிய 2 நாள்கள் சந்தை நடைபெறுகிறது. விழாக் காலங்களில் ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும். விற்பனைக் கட்டணமாக ஓா் ஆட்டுக்கு ரூ. 20 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இக்கட்டணம் கடந்த சனிக்கிழமைமுதல் ரூ. 30 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
