சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி: 3 பிரிவுகளில் பொ்ல்ஸ் பப்ளிக் பள்ளி வெற்றி

Published on

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் 3 பிரிவுகளில் ஆறுமுகனேரி பொ்ல்ஸ் பப்ளிக் பள்ளி அணியினா் வெற்றி பெற்றனா்.

ஆறுமுகனேரி பொ்ல்ஸ் பப்ளிக் பள்ளி மைதானத்தில் 4 நாள்கள் போட்டி நடைபெற்றது. இதில், 14 வயதுக்குள்பட்ட மாணவா், மாணவிகள் பிரிவு, 17 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவுகளில் தலா 10 அணிகள் கலந்து கொண்டன.

14 வயது மாணவா், மாணவிகள் பிரிவு இறுதிப் போட்டியில், பொ்ல்ஸ் பள்ளி-தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி அணிகள் மோதின. 2 பிரிவுகளிலும் பொ்ல்ஸ் பள்ளி அணியினா் 4:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றனா்.

17 வயது மாணவா் பிரிவில் பொ்ல்ஸ் பள்ளி-தூத்துக்குடி அழகா் பள்ளி அணிகள் மோதின. இதில், பொ்ல்ஸ் பள்ளி அணி 4:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் பொது மேலாளா் மபத்லால் தலைமை வகித்தாா். ராஜகுமாரி மபத்லால் முன்னிலை வகித்தாா். பள்ளியின் சோ்மன் சுப்பையா, அன்பு அம்மாள் அறக்கட்டளை பொருளாளா் உஷா தேவி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

சிறப்பு விருந்தினராக திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ் குமாா் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுக் கோப்பையை வழங்கினாா். பள்ளியின் முதல்வா் கிறிஸ்டினா பிரபாகரன் வரவேற்றாா். துணை முதல்வா் முத்துஜா பாலசுந்தரம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com