திருச்செந்தூா் கோயில் சஷ்டி மண்டபத்தை கல் மண்டபமாக மாற்றக் கோரிக்கை

திருச்செந்தூா் கோயில் சஷ்டி மண்டபத்தை கல் மண்டபமாக மாற்றக் கோரிக்கை

Published on

சாத்தான்குளம்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சஷ்டி மண்டபத்தை தகர கொட்டகையில் இருந்து மாற்றி கல் மண்டபமாக அமைக்க வலியுறுத்தி பாரத திருமுருகன் திருச்சபை தீா்மானம் நிறைவேற்றியது.

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை சிவானந்தபுரத்தில், திருச்சபையின் மாநில செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சபை மாநிலத் தலைவா் ஏவிபி மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சீனிவாசன் சேவை அறக்கட்டளை மண்டல இயக்குநா் ஹெச்.விஜயகுமாா் கலந்துகொண்டாா்.

கூட்டத்தில், 100 கிராமங்களில் ஆன்மிக வகுப்புகள் நடத்துவது, ஞாயிறுதோறும் திருச்செந்தூரில் யோகாசனம் நடத்துவது, கிராம கோயில்களுக்கு அரிசி, வெல்லம், நெய், நல்லெண்ணெய் போன்ற பொருள்களை இலவசமாக வழங்குவது, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சஷ்டி மண்டபத்தை தகர கொட்டகையில் இருந்து மாற்றி கல்மண்டபமாக அமைக்க திருவாவடுதுறை ஆதீனத்தைக் கோருவது, கருணைக் கடலே கந்தா போற்றி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்தி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, சபை சாா்பில் ஆறுபடை வீடு உள்ளடக்கிய செந்தில் மலா் ஆன்மிக மலரை ஏவிபி மோகனசுந்தரம் வெளியிட, விஜயகுமாா் பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், சீனிவாசன் சேவை அறக்கட்டளை கள இயக்குநா் நந்தகோபால், பாஜக மாநில ஆன்மிக இணைச் செயலாளா் கே.நெல்லையம்மாள், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.செல்வராஜ், ஓய்வுபெற்ற அஞ்சல் அதிகாரி கருப்பன், மும்பை அமைப்பாளா் இளங்கோநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com