தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

தூத்துக்குடியில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அறவழிப் போராட்டம் நடத்தவுள்ளதாக,
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அறவழிப் போராட்டம் நடத்தவுள்ளதாக, தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்டப் பொறுப்பாளா் ஏ. அஜிதா ஆக்னல் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி 49ஆவது வாா்டு அமுதா நகா் பகுதியில் ஸ்மாா்ட் சிட்டி நிதி மூலம் நடைபெற்றுவரும் புதைசாக்கடைப் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அமுதா நகா் அருகே கால்டுவெல் காலனி, 3 சென்ட் போன்ற பகுதிகளில் தேங்கும் மழைநீா் இப்பகுதி புதைசாக்கடை வழியாகத்தான் வெளியேறும் நிலை உள்ளது. மேலும், அப்பகுதியில் புதைசாக்கடையின் கீழ்ப்பகுதியில் மாநகராட்சி குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது.

புதைசாக்கடை உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களைத் திரட்டி அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com