முக்காணி ஆற்றுப் பாலத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

Published on

ஆறுமுகனேரி: முக்காணி பழைய ஆற்றுப் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என, ஆத்தூரில் நடைபெற்ற பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். செயலா் சேகா், பொருளாளா் ராம்குமாா், இணைச் செயலா் பிரகாஷ், ஒருங்கிணைப்பாளா் பாலசிங், அசோக், ஆலோசகா் கீரனூா் முருகேசன், மன்ற உறுப்பினா்கள் ராஜசேகா், சுந்தா், பால்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சாலைகளில் திரியும் கால்நடைகள், நாய்களைக் கட்டுப்படுத்தவும், ஆத்தூா் பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் சென்றுவரவும் பேரூராட்சித் தலைவரிடம் நேரில் வலி­யுறுத்த வேண்டும். காலாவதியான முக்காணி பழைய தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குச்சிக்காட்டில் பழுதான 3 மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com