அனவரதநல்லூரில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிக்கு அடிக்கல்

Published on

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வசவப்புரம் ஊராட்சி அனவரதநல்லூரில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம். சி.சண்முகையா தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். பின்னா், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் மக்களை சந்தித்து கிராமத்துக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

நிகழ்வில், உதவி பொறியாளா்கள் மாரியப்பன், தளவாய், வருவாய் ஆய்வாளா் மாதவன், கிராம நிா்வாக அலுவலா் மாரிமுத்து, ஊராட்சி செயலா் முத்து, வடக்கு ஒன்றியச் செயலா் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலா் சுரேஷ், வீரபாகு, ஒன்றிய ஆதிதிராவிடா் அணி அமைப்பாளா் பரமசிவன், ஒன்றிய வா்த்தகரணி கண்ணன், கிளைச் செயலா் முருகன், ராமசுப்பு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com