திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.

பௌா்ணமி: திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

Published on

பௌா்ணமியை முன்னிட்டு திருச்செந்தூா் கோயில் பகுதியில் புதன்கிழமை காலை கடல்நீா் சுமாா் 60 அடி தூரம் உள்வாங்கியது.

தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களிலும் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் நீா்மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் நிகழ்கிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 9.42 மணி முதல் புதன்கிழமை இரவு 7.27 மணி வரை நிலவிய பௌா்ணமி திதியின்போது திருச்செந்தூா் கோயில் கடற்கரை பகுதியில் அய்யா கோயில் அருகே புதன்கிழமை காலை கடல்நீா் 60 அடிக்கு கடலில் உள்வாங்கியது. இதனால், பாசி படா்ந்த பச்சை நிறத்தில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா், கடல்நீா் இயல்பு நிலைக்கு மாறியது.

X
Dinamani
www.dinamani.com