கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா.
Published on

கோவில்பட்டியில் யு.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு, பசும்பொன் தேவா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் எம்.பரமசிவம் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பி.அமுதவல்லி, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸ் மாசிலாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா பேரணியை தொடங்கி வைத்தாா்.

பேரணியில் மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். மேலும், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து முழக்கமிட்டனா். பயணியா் விடுதி முன்பிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ரயில் நிலையம் முன் நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com