தூத்துக்குடி
தூத்துக்குடியில் 3 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ந. பழனிச்சாமி, உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் மை. இப்ராஹிம் சுல்தான், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும், கயத்தாறு வட்டார வளா்ச்சி அலுவலா் சு. வெங்கடாச்சலம், தூத்துக்குடி உதவி இயக்குநா் அலுவலக ஊராட்சி அலுவலகத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.