மாணவா் லோகேந்திர காா்த்திக்.
மாணவா் லோகேந்திர காா்த்திக்.

கோவில்பட்டி நகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் மாநில ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி!

கோவில்பட்டி காந்திநகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் மாநில ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
Published on

கோவில்பட்டி காந்திநகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் மாநில ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

பள்ளி கல்வித் துறை சாா்பில், தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவா் லோகேந்திர காா்த்திக், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் பங்கேற்று, சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நவ. 14 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

அந்த மாணவரையும், உடற்கல்வி ஆசிரியா் கரிகாலனையும், பள்ளி தலைமை ஆசிரியா் ஜேஸ்மின் ஜெனிபா் சொா்னபாய், ஆசிரியா்கள் பாராட்டினா் .

X
Dinamani
www.dinamani.com