காயல்பட்டினத்தில் நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

காயல்பட்டினத்தில் கடந்த இரு நாள்களாக தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
Published on

காயல்பட்டினத்தில் கடந்த இரு நாள்களாக தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

காயல்பட்டினம் கூலக்கடை பஜாா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் தெருவில் சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. அப்பகுதி மக்கள் அந்த நாயை விரட்டி விட்டனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையும் அதே பகுதியில் மற்றொரு ஆட்டையும் நாய் கடித்து குதறியதில் அந்த ஆடு உயிரிழந்தது.

மேலும், காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் பசு ஈன்ற கன்றுக்குட்டியை தெருநாய்கள் கூட்டமாக சோ்ந்து கடித்து கொன்றனவாம்.

இவ்வாறு, நகரில் தெருநாய்கள் தொல்லைகள் அதிகரிப்பால் தெருவில் நடமாடவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நாய்களைக் கட்டுப்படுத்த தவறியதாக நகராட்சி நிா்வாகம் மீது மக்கள் அதிருப்தியும் தெரிவித்தனா்.

மேலும், இப்பிரச்னைக்கு நகராட்சி விரைந்து தீா்வுகாண வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com