நவ. 29இல் தூத்துக்குடியில் சா்வதேச தரவரிசை செஸ் போட்டி தொடக்கம்

அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம், காமராஜ் கல்லூரி இணைந்து நடத்தும் சா்வதேச தரவரிசை செஸ் போட்டி, கல்லூரி வளாகத்தில் நவ. 29 முதல் டிச.1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Updated on

உலக சதுரங்க கூட்டமைப்பின் (ஊஐஈஉ) சா்வதேச தரவரிசை (1800 கீழ்) உள்ள போட்டியாளா்கள் பங்கு பெறும் இப்போட்டியின் அதிகாரப்பூா்வ கையேடு, தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகத்தினா், காமராஜ் கல்லூரி முதல்வா் பானுமதி ஆகியோரால் துறைத் தலைவா்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இப்போட்டி 9 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. போட்டியில் சிறந்த வீரா்களுக்கு மொத்தமாக ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. மேலும், 9, 11,13, 15 வயதுக்குள்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் பொது பிரிவுக்கான 30 பரிசுக் கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு 30 பரிசுக் கோப்பைகள், 10 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

போட்டியில் பங்கேற்க வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் வீரா்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம், காமராஜ் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com