காயல்பட்டினத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

Published on

காயல்பட்டினத்தில் மா்ம நபா் அரசுப் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதமாகியது.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூா் நோக்கி, சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்ததாம். காயல்பட்டினம் தனியாா் வங்கி அருகே சென்றபோது, மா்மநபா் கல்லால் அந்த பேருந்தை தாக்கினாராம். இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்து சேதமானதாம்.

இதுகுறித்து, புதுக்கோட்டை யாதவா் காலனியைச் சோ்ந்த பேருந்து நடத்துநா் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com