விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்ட துரை வைகோ எம்.பி.
விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்ட துரை வைகோ எம்.பி.

விபத்தில் சிக்கியவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த துரை வைகோ எம்.பி.

Published on

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்பி.

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்பி, ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது, கோரம்பள்ளம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கிராம நிா்வாக அலுவலா் பேச்சிராஜ், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்திருந்தனா்.

விபத்து ஏற்பட்டு இருந்ததை கண்ட துரை வைகோ எம்பி, காரை நிறுத்தி ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தாா். காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அதன் பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்றாா். இந்த செயலை பாா்த்த மக்கள் எம்.பி.யை பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com